நாகேஸ்வரன் கோவில் ( Nageshwaran Temple at Kumbakonam)

நாகேஸ்வரன் கோவில்

நாகேஸ்வரன் கோவில் இந்து கோவில் ஆகும், சிவன் முதன் கடவுளாக எழுந்தருளி உள்ளார், நாகேஷ்வரன் கோவிலை பற்றி தேவாரத்தில் குறிப்பிடடு பாடப்பட்டுள்ளது, ஆதித்திய சோழனால் ஒன்பதாம் நுற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது, கட்டிடகலை கலை வல்லுனர்களாலும் மற்றும் வானியல் வல்லுனர்களாலும் வடிவமைக்கப்பட்டது இக்கோவிலாகும். இக்கோவிலின் சிறப்பு அம்சமாக சித்திரை மாதம் மட்டும் சூரிய ஒளிக்கதிர் கோவிலின் உள்ளே இடது கருவறையில் விழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, நாகேஸ்வரன் கோவில் முன்று கோபுரம் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைக்களில் அமைக்கப்பட்டுள்ளது. ரகுஸ்தலமாகவும், நவக்கிரக புண்ணியஸ்தலமாகவும் விளங்குகிறது, இராஜேந்திர சோழர்கள் குறிப்பயணமான போர்க்கு செல்லும் போது இந்த நாகேஸ்வரன் கோவில் உள்ள கங்கா கணபதியை வணங்கி செல்வதால் வெற்றி பெற்றதாக சொல்லப்படுகிறது.















ராமசாமி கோவில் - Ramasamy Templ







ராமசாமி கோவில் , வைஷ்ணவ சமய கோவில்களில் கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோவில் முக்கிய ஒன்றாக திகழ்கிறது, ராமயணத்திலும்  கும்பகோணத்தில் உள்ள ராமசாமி கோவிலை பற்றி குறிபிடப்பட்டுள்ளது. இக்கோவில் கடவுள் ராமர் சீதா தேவியும் மற்றும் அனுமான் ஆவர்,  ராமசாமி கோவில் ஆனது  கும்பகோணத்தின் மத்தியில் உள்ள பெரிய கடை தெருவில் அமைந்து உள்ளது.

ஆதிகும்பேஸ்வரர் கோவில் - Aadi kumbeshwarar Temple








உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்

கும்பகோணம் பெயர் காரணம்



இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.

பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார் , உலகத்தின் பல்வேறு பகுதிலீருந்து மன் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின , இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மன் எடுத்து குடம் செய்து வேதங்களை காத்தார்.
 குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.

From Twitter

Recent Posts